Friday, 29 November 2013

கிர்ணிப்பழ சரும பராமரிப்பு

கிர்ணிப்பழத்தில் வைட்டமின் "A", "B" மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

1) இளமையாக இருக்க - பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் முகத்தை கழுவுங்கள். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிப்பதை காணலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும்.

2) முகம் பொலிவாக - கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து அதை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.

3) கால் பாதங்களுக்கு - கடுகு எண்ணெயுடன், கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் பஞ்சு போல் மிருதுவாகும்.

No comments:

Post a Comment