பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் அதிக கவனம் செலுத்துக்கின்றனர். அதற்கு கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த கிரீம்கள் நாளடைவில் சருமத்தை பாதிக்கும். ஆனால் பழங்களால் முகத்திற்கு செய்யப்படும் பேஷியல் மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் சருமத்திற்கு எந்த விதமான பிரச்சனையும் வராது. அவை என்னவென்று பார்க்கலாம்....
* கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. எனவே சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், 1 முட்டையின் மஞ்சள் கருவுடன், 1 டேபிள் ஸ்பூன் கிவி சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்களுடன், அதிகப்படியான எண்ணெயும் நீங்கும்.
* வாழைப்பழத்தில் ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளன. இத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அத்துடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முதுமைத் தோற்றமானது நீங்கி, இளமைத் தோற்றத்தைப் பெறலாம்.
* பேஸ் மாஸ்க்குகள் அனைத்திலுமே தேன் சேர்க்கப்படும். ஏனெனில் தேனில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருப்பதால் தான். அதிலும் முதுமைத் தோற்றத்தைப் போக்குவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை மசாஜ் செய்து குளிர்ந்து நீரில் அலச வேண்டும். இதனால் முகம் நன்கு மென்மையாகவும், இளமைத் தோற்றத்துடனும் இருக்கும்.
* முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

No comments:
Post a Comment