Friday, 29 November 2013

காஸ்மெடிக் சர்ஜரி: கடைபிடிக்க வேண்டியவை


அறுவை சிகிச்சை மூலம் ஒருவர் தனது இளமைத் தன்மையை திரும்பப் பெறுவதோடு, சருமத்தின் மீது ஏற்படும் மூப்படைதலுக்கான விளைவுகளை நிறுத்த முடியும். பிளவுப்பட்ட உதட்டிற்காகவும், மூக்கு அல்லது உதடு வேலைக்காகவும் மற்றும் பல்வேறு சரும பிரச்சனைக்காகவும் செய்யப்படுகின்ற இந்த அறுவை சிகிச்சையை, நாகரீகமாகவும் கருதுகிறார்கள்.

மேலும் எப்போதுமே அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் பார்த்து கொள்ள வேண்டிய செயல்கள் உள்ளன. ஆகவே அழகாக மாற வேண்டுமென்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நினைப்பவர்கள், அழகு சிகிச்சை நிபுணர் வழங்கும், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் எடுத்துக் கொள்ள வேண்டிய சில அழகுக்கான முன்னெச்சரிக்கை குறிப்புகளை கருத்தில் கொண்டு, பின் பற்ற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்..,.

• அறுவை சிகிச்சைக்கு பிறகு, அந்த பகுதியில் எந்த ஒரு அழகுப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. எப்போதும் அறுவை சிகிச்சை செய்த பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பகுதியை மருந்து தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.

• சூரிய ஒளியில் சிறிது நேரமே செல்ல வேண்டும். ஏனெனில் புற ஊதா கதிர்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்ட தையல் மீது தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படும் சன் ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்தினால், ஒன்றும் ஆகாது என்று நினைக்க வேண்டாம். தையலை பிரித்த பிறகு, மருத்துவர் பரிந்துரைத்தது போல ஆன்டிபயாடிக் மற்றும் மருந்துகள் போட வேண்டும்.

• ஆன்டிபயாடிக்குகள் சில நேரங்களில் வாயு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் சரியான உணவு கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பழங்கள், கொழுப்பு நீக்கிய பால் மற்றும் மிதமான உணவுகளை போதுமான அளவு உண்ண வேண்டும்.

முக அறுவை சிகிச்சைகளில் உணவு சாப்பிடுவது சிரமமாக இருப்பதால், அந்த நேரங்களில் திரவ உணவுக் கட்டுப்பாட்டை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்றவைகளை, அறுவை சிகிச்சை பகுதி முழுவதுமாக குணமாகும் வரை உபயோகிக்கக்கூடாது.

• இரத்த உறைதலை கடினமாக்கும் மருந்துகளை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சை துவங்குவதற்கு முன்பு நோயாளி ஒரு வலுவான நோய்த் தடுப்பாற்றலை கொண்டிருக்க வேண்டும். மருத்துவர்கள் அனுமதியின்றி மருந்துகளை உட்கொள்ளல் தீங்கு நிறைந்த விளைவுகளை ஏற்படுத்தலாம்.

• கற்றாழை சாற்றினை உட்கொள்வது, உள்ளிருந்து கிழிந்த செல்களை குணப்படுத்துவதற்காகவும் மற்றும் தரமான சருமத்தை உருவாக்கவும் உதவுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைகளில் முகம் சார்ந்தவைகள், சரும பொலிவு இழப்புக்கு வழிவகுக்கிறது.

அத்தகைய இழந்த பொலிவை கற்றாழை சாறு திரும்பப் பெற உதவுகிறது. அதிலும் அந்த கற்றாழையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment