Friday, 29 November 2013

பருக்களின் ஏற்படும் தழும்புகள் மறைய வேண்டுமா?


பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள். நகம் பட்டாலே வடு விழுந்துவிடும்.

அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும். முக‌ப்பரு வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்குவத‌ற்கு மு‌ன்பு, ஐ‌ஸ் க‌ட்டிகளா‌ல் ஒ‌த்தட‌ம் கொடு‌த்த ‌பிறகு அ‌தி‌ல் கை வை‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் பரு‌க்க‌ளி‌ன் வ‌ழியாக ர‌த்த‌ம் வெ‌ளியாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

பொதுவாக பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அது மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளையான ‌திரவ‌த்தை எடு‌த்து ‌விடுவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அ‌திலு‌ம் ம‌ற்ற இட‌ங்க‌ளி‌ல் அவை படாம‌ல் எடு‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. மேலு‌ம், பருவை ‌நீ‌க்குவது ‌எ‌ன்பதை கவனமாக செ‌ய்ய வே‌ண்டு‌ம். பருவை கைகளா‌ல் ‌கி‌ள்‌ளி எடு‌த்து‌விடு‌கிறோ‌ம்.

அ‌தி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியான ‌பிறகு ர‌த்த‌ம் வரு‌ம். அதனை துடை‌த்து‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு அ‌ப்படியே ‌வி‌ட்டு‌விட‌க் கூடாது. அ‌ப்படி ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் பரு‌க்க‌ள் பரவு‌கிறது. பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்‌கியது‌ம் உடனடியாக அதனை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டு அ‌தி‌ல் ஏதாவது ஒரு பே‌ஸ் பே‌க்கை (‌க்‌ரீ‌ம்) போட வே‌ண்டு‌ம்.

அ‌ப்படி போடா‌வி‌ட்டா‌ல், பரு‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட துளை‌‌க்கு‌ள் தூசு, துக‌ள்க‌ள் போ‌ய் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது.

சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. பருவை ம‌‌ட்டு‌ம் ‌நீ‌க்‌கி‌வி‌ட்டா‌லு‌ம், உ‌ள்ளு‌க்கு‌ள் இரு‌ந்து ‌சீ‌‌ழ் போ‌ன்ற ஒ‌ன்று வ‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம்.

அதனை எ‌வ்வளவுதா‌ன் எடு‌க்க முடியு‌ம். ஒரு வேளை அது சரும‌த்‌தி‌ற்கு அடி‌யிலேயே த‌ங்‌கி‌வி‌ட்டாலு‌ம் ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். அ‌திகமாக எடு‌த்தாலு‌ம் பரு இரு‌ந்த இட‌த்‌தி‌ல் வடு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். எனவே பருவை அழகு‌க் கலை ‌நிபுண‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வதை ‌விட, அ‌திகமாக பரு இரு‌ப்பவ‌ர்க‌ள் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்வதுதா‌ன் ந‌ல்லது.

பரு‌க்க‌ளி‌னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட வடு ‌நி‌ச்சயமாக போகு‌ம். அத‌ற்கு ஒரு ‌நீ‌ண்ட ‌சி‌கி‌ச்சை உ‌ள்ளது. முத‌லி‌ல் பரு உ‌ள்ளவ‌ர்க‌ள் பேஷிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளவே‌க் கூடாது. ஒருவரது சரும‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசை இருந்தால் பரு வரும்.

மேலு‌ம், பே‌‌ஷ‌ிய‌லி‌ன் போது பய‌ன்படு‌த்து‌ம் ‌க்‌ரீ‌ம்க‌ள் அனை‌த்‌திலு‌ம் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசைதா‌ன் இரு‌க்கு‌ம். எனவே அவரகளது சரும‌த்தை பேஷிய‌ல் மேலு‌ம் ‌சி‌க்கலா‌க்கு‌ம். முக‌த்‌தி‌ல் அ‌திகமான பரு‌க்க‌ள் இரு‌ப்பவ‌ர்க‌ள் அவ‌சியமாக பேஷிய‌ல் செ‌ய்தே ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெ‌ற்று‌வி‌ட்டு ‌பிறகு பேஷிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். ‌ப்‌ளீ‌ச் செ‌ய்யலா‌ம். ஏனெ‌னி‌ல் ‌ப்‌ளீ‌ச் செ‌ய்வதா‌ல் முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய் த‌ன்மை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம். எனவே ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.

புருவம் வளர எளிய வழிகள்

முகத்திற்கு அழகைத் தருவது கண்கள் என்றால், அந்த கண்களுக்கு அழகைத் தருவது புருவங்கள். அத்தகைய புருவங்கள் சிலருக்கு மிகவும் குறைவாக இருக்கும். சொல்லப்போனால் சிலருக்கு புருவம் இருக்கும் இடமே தெரியாது.

ஆமணக்கு எண்ணெயில் அதிகமான அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த எண்ணெய். இதற்கு இந்த எண்ணெயை புருவத்தில் தடவி, 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின் அரை மணிநேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில், கிளின்சரைப் பயன்படுத்தி கழுவிட வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், புருவம் நன்கு வளரும். பால் பொருட்களில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன.

ஆகவே இரவில் தூங்குவதற்கு முன்பு, பாலை புருவத்தில் தடவி படுக்க வேண்டும். இதனால் பாலில் உள்ள இயற்கைப் பொருள் முடியின் வேர்களுக்கு ஒரு நல்ல ஈரப்பசையைத் தந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

வெங்காயத்தில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வேகமாக வளரச் செய்யும். ஆகவே வெங்காயச் சாற்றை காட்டனில் நனைத்து தடவிக் கொள்ள வேண்டும். முக்கியமாக இதனை தடவியதும் கழுவிடக் கூடாது. கழுவாமல் இருந்தால் தான், இதன் முழு பயனை அடைய முடியும். 

இயற்கையான பொருட்களை வைத்து வாக்ஸிங் செய்யலாம்

உடலில் தேவையில்லாத முடிகளை நீக்க கெமிக்கல் வாக்ஸிங் என்பது ஒரு வழி. அதுமட்டுமே வழியல்ல. இயற்கையான பொருட்களை வைத்தே வாக்ஸிங் செய்யலாம். நாம் பாட்டியும், அம்மாவும் கூட பயன்படுத்திய பொருட்கள்தான் இவை. பெண்களே வீட்டிலிலேயே உங்கள் பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

• கஸ்தூரி மஞ்சள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தாலே முடி வளர்வதை தடுக்கலாம்.

• வேப்பிலை வெந்நீரில் போட்டு குளித்து வந்தாலும் முடி வளர்ச்சி கட்டுக்குள் இருக்கும்.

• வேப்பங்குச்சியை எரித்து அதன் சாம்பலை உடம்பில் பூசி குளித்து வந்தாலும் முடி வளர்வது குறைவாக இருக்கும்.

• கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், கார்போக அரிசி, கோஷ்டம் வேர், விளாமிச்சை வேர், ரோஜா இதழ், செண்பகமொட்டு இவைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து 250 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். இத்துடன் 250 கிராம் பயத்தம் பயிரையும் அரைத்து ஒன்றாய் கலந்து குளியல் பொடியாக தயார் செய்து கொள்ளவும்.

• குளிப்பதற்கு முன்னர் உடலில் எண்ணெய் தடவி கொண்டு பின்னர் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பாத் பவுடரை தேய்த்து குளித்து வந்தால் சரும வறட்சி ஏற்படாது. முடி வளர்ச்சியும் கட்டுப்படும்.

சோர்வை போக்கும் அழகு குறிப்புகள்.....

கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.

* வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

* முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும் முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.

* ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.

* ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.

* வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வையுங்கள்.

* பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ் துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

* எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில் போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம் கிடைக்கும்.

* ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில் தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது. தேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும். 

கூந்தலுக்கு கண்டிஷனிங் செய்வது எப்படி?


• முதலில் தேவைப்படும் ஷாம்பு, கண்டிஷனர் (முடியை நன்கு பராமரிக்க ஷாம்பு போட்ட பிறகு முடியில் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் பொருள்) மற்றும் சீப்பை எடுத்துக் கொள்ளவும்.

• முடி சிக்காவதைத் தடுக்க குளிக்கப் போவதற்கு முன்பே, நன்றாக பிரஷ் வைத்து சீவி சிக்கை நீக்கிக் கொள்ளவும்.

• முடியை வெதுவெதுப்பான நீரில் 30 வினாடிகள் நன்கு நனைக்கவும்.

• முடியின் நீளத்திற்குத் தக்கபடி, உள்ளங்கையில் ஷாம்புவை எடுத்துக் கொள்ளவும்.

• தலையின் உச்சியில் ஷாம்புவை தடவி, தலை முழுவதும் விரல் நுனிகளால் மசாஜ் செய்து, பின் முடி நுனி வரை தேய்க்கவும்.

• பின் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு முழுவதும் நீங்கும் வரை நன்கு அலசவும்.

• இப்பொழுது சிறிது கண்டிஷனரை, உள்ளங்கையில் விட்டு, இரண்டு கைகளால் தடவி, கூந்தல் முழுவதும் தடவ வேண்டும். குறிப்பாக ஸ்கால்ப்பில் படும்படியாக தடவக் கூடாது.

• 2 முதல் 3 நிமிடங்கள் வரை கண்டிஷனரைத் தலையில் முழுவதும் பரவும் படி மெதுவாக விரல்களால் நன்கு தேய்த்துக் கொண்டிருக்கவும்.

• இப்பொழுது தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், கண்டிஷனர் முழுவதுமாக நீங்கும் வரை நன்கு அலசவும்.

• இறுதியாகக் குளிர்ந்த நீரால் வேகமாக அடிக்கவும். அப்பொழுதுதான் தலையில் உள்ள மயிர் துவாரங்கள் அடைபட்டு, கூந்தலுக்கு கூடுதல் பளபளப்பைத் தரும்.

•  தலைமுடியின் ஈரத்தை ஒரு துணியால் ஒற்றி எடுக்கவும். முடியைப் பிழியக்கூடாது.

• முடியைக் காற்றிலேயே உலர விடுவதுதான் ஆரோக்கியமானது. ஹேர் ட்ரையர் மூலம் உலர வைப்பதால் முடி வறண்டும் சுருண்டும் போகும்.

வெயிலால் ஏற்படும் சரும அரிப்புகள் போக டிப்ஸ்

இன்றைய காலத்தில் யாரும் வீட்டிலேயே உட்கார்ந்து வேலை செய்வதில்லை. பலருக்கு வீட்டை விட, வெளியே தான் அதிக வேலை இருக்கும். கோடைக்காலம் ஆரம்பிக்க போகிறது. இதுவரை வேலையில் ஏற்படும் பிரச்சனையையே சரிசெய்ய முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சருமத்தில் வேறு பிரச்சனைகள் ஏற்படப் போகின்றன.

அதில் ஒன்று தான் சருமத்தில் அதிகப்படியான வெப்பம் படுவதால் ஏற்படும் அரிப்புக்கள். பொதுவாக இத்தகைய அரிப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான வியர்வை வெளிப்படுவது மற்றும் உடல் வெப்பம் தான்.

இதனால் சருமத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகளாக ஆங்காங்கு காணப்பட்டு, அதன் மேல் அரிப்புக்கள் உண்டாகி, எரிச்சல் உண்டாவது என்றெல்லாம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உடலின் கழுத்து, முகம், கைகள், முதுகு, மடிப்புக்கள் உள்ள இடங்கள் போன்றவற்றில் ஏற்படும். குறிப்பாக இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

• கற்றாழையின் ஜெல்லை தினமும் மூன்று முறை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி வந்தால், அரிப்புக்கள் ஏற்பட்ட இடத்தில் உண்டான காயமானது குளிர்ந்து, விரைவில் குணமாகிவிடும்.

• கடலை மாவை நீரில் கலந்து, அரிப்புக்கள் உள்ள இடத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்புகளானது போய்விடும்.

• சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் அரிப்புகளை நீக்க, அந்த இடங்களில் ஐஸ் கட்டிகளை மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அரிப்புக்களானது பரவாமல் இருப்பதோடு, எளிதில் நீங்கும்.

• வெள்ளரிக்காய் சருமத்தை குளிர்ச்சி அடையச் செய்வதில் மிகவும் சிறந்தது. எனவே சருமத்தில் எரிச்சலையூட்டும் அரிப்புக்களை நீக்க, வெள்ளரிக்காயின் துண்டுகளை தேய்த்து வர குணமாகும்.


புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்


ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.

1. ஆப்பிளை சாப்பிட்டால் சுருக்கங்கள் உண்டாவதை தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி- ஏஜிங் பொருள் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்கும். மேலும் இறந்த செல்களை நீக்கி, பொலிவான தோற்றத்தை கொடுக்கும். அதிலும் இந்த பேஸ்ட்டை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பளிச்சென இருக்கும்.

2. மேலும் இது ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும். அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.

3. ஆப்பிளை வைத்து மாஸ்க் செய்தால், அதைவிட நன்றாக இருக்கும். ஏனெனில் அப்போது ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நேரடியாக உடலில் செல்லும். அந்த மாஸ்க் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

4. ஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

5. முக்கியமாக ஆப்பிள் ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் பொருள். இது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும். அதற்கு தினமும் குளிக்கும் முன், ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்கவும். இவ்வாறெல்லாம் செய்தால் முகமானது பளிச்சென்று இருப்பதோடு, பொலிவாக இருக்கும்.

பிளாக் ஹெட்ஸ் போக வேண்டுமா?

* முகத்தில் ஏதேனும் ஒரு குறை இருந்தால் முகத்தை அசிங்கபடுத்திவிடும்.பெரும்பாலானவர்களுக்கு மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.

* கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது.

* நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். மூக்கிற்கு நல்ல மஜாஜ் செய்தாலே எல்லாம் சரியாகிவிடும். மூக்கிற்கும் நல்ல மஜாஜ் இருக்குது. ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்கும் நீரை எடுத்து ஆவி பிடித்து பின்னர் கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள்.

* இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

* ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது.

* அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு. பின்பு உங்கள் அழகை நீங்களே பராமரிக்க ஆரம்பிச்சிடுவீங்க.

கோடைக்கால மேக் அப்

கோடையில் வியர்வையினால் வேர்க்குரு உள்ளிட்ட சரும கோளாறுகள் ஏற்படும். முகத்தில் எண்ணெய் வடியும். கோடைகாலத்திற்கு ஏற்ற எளிய மேக் அப் டிப்ஸ் இதோ....

• கோடை காலத்தில் மேக் அப் போடும் போது அடர்த்தியாக பவுண்டேசன் போடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது வியர்த்து முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும்.

• கண்களில் அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்மைக்கு பங்குண்டு. காலை நேரத்தில் லைட்டாகவும், மாலை நேரத்தில் திக் லைனாகவும் போடுவது கண்களுக்கு கூடுதல் கவர்ச்சி தரும்.

• கோடையில் லிப்ஸ்டிக்கிற்கு குட் பை சொல்லிவிடுங்கள். உதடுகளுக்கு அழகு தருபவை லிப் கிளாஸ்தான். உடைகளுக்கும், சருமத்திற்கும் ஏற்ற லிப்க்ளாஸ் உபயோகியுங்கள்.

• கோடையில் பன்னீர், ரோஸ்வாட்டர் குளுமை தரும். சருமத்தில் அடைந்துள்ள அழுக்குகளை நீக்க சிறிதளவு பருத்து துணியில் ரோஸ்வாட்டரை நனைத்து முகத்தை துடைத்தால் அழுக்குகள் நீங்கிவிடும். சருமம் புத்துணர்ச்சியோடு திகழும்.





உள்ளங்கைகள் மென்மையாக வழிகள்

 உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் 'வாசலின்' தடவிக் கொள்ளலாம்.

• ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நான்கு (அ) ஐந்து சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை கைகளுக்கு பூசி, தேய்த்துக் கழுவுங்கள். ஆலிவ் எண்ணெய் தோலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். உருளை, கருமையை எடுத்துவிடும். நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ் வகைகளை அருந்துவதும் அவசியம்.  

• வைட்டமின்-சி குறைபாட்டால் சிலருக்கு கைகளில் தோல் உரியலாம். டிடர்ஜென்ட் பவுடர், சோப் போன்றவற்றாலும் அலர்ஜி ஏற்பட்டு தோல் உரியலாம். 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடருடன் தயிர் கலந்து கை, உள்ளங்கை, விரல் இடுக்கில் பூசி, மிதமான வெந்நீரில் தேய்த்துக் கழுவுவதுடன், மறக்காமல் நெல்லிக்காய் ஜூஸ் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.  

• நகத்தின் நிறம் சிலருக்கு திடீரென பழுப்பு நிறத்தில் மாறலாம். இரும்புச்சத்து குறைபாடுதான் இதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய, வெதுவெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.  

• அதீத வெயிலோ, கடும்குளிரோ சட்டென நம்மை பாதிக்கும்போது, விரல் நகம் உடையலாம். பாதாம் பாலை கை, விரல், நகங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நகம் வலுவடையும்.  

• உள்ளங்கை, கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறக்க, தோலின் சுருக்கங்கள் நீங்கி, தசைகள் விரியும்.  

• நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு எலுமிச்சம்பழத்தை உள்ளங் கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும்.

முகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவது எப்படி?


* காலையில் முகத்தை வெதுவெதுப்பான மற்றும் மிதமான பேஸ் வாஷ் மூலம் கழுவ வேண்டும். இதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதாவது, முதலில் வெதுவெதுப்பான நீரை வைத்து முகத்தை ஈரப்படுத்திய பின், உள்ளங்கையில் பேஸ் வாஷ் ஊற்றி அதை முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். முறையாக சுத்தம் செய்த பின், வெதுவெதுப்பான நீர் வைத்து கழுவ வேண்டும்.

* அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப, பேஸ் வாஷ் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம். உதாரணமாக, எண்ணெய் வகை சருமத்தினர், எண்ணெய் கலக்காத பேஸ் வாஷையும், வறண்ட சருமத்தினர் ஆல்கஹால் கலக்காத பேஸ் வாஷையும் பயன்படுத்தலாம்.

* குளிப்பதற்கு முன், உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதன் பின், குளிக்கும் போது, மிதமான பாடி வாஷை பயன்படுத்தலாம்.

* சருமத்தை சுத்தம் செய்த பின், சன்ஸ்கிரீன் தேய்க்க வேண்டும். வெளியில் செல்லாத போதும், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. சன்ஸ்கிரீன்கள் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கிறது.

* பகல் 11 மணியளவில் மாய்சரைசர் தடவலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலந்த மாய்சரைசர் பயன்படுத்தலாம். இத்தகைய மாய்சரைசர்கள், மாசு, சூரிய ஒளி மற்றும் புகை ஆகியவற்றால் சருமம் சேதமடைவதில் இருந்து காக்கிறது.

* தோலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு சத்து கிடைக்க, பாதாம் மற்றும் அக்குரோட் போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம்.

* மதிய வேளைகளில் வெளியில் செல்வதாக இருந்தால், மீண்டும் சன்ஸ்கிரீன் போட்ட பின் செல்வது நல்லது.

* வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புபவர்கள், வீட்டிற்கு வந்ததும், பேஸ் வாஷ் மற்றும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். தோல் வறண்டு இருப்பதாக உணர்பவர்கள், லைட்டான மாய்சரைசர் அப்ளை செய்யலாம்.

* இரவு நேரத்தில், வைட்டமின் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தினால், அவை முகச்சுருக்கம் ஏற்படுவதில் இருந்து தவிர்க்கும். எனினும், இத்தகைய கிரீம்களை தோல் நிபுணர்களின் பரிந்துரைப்படி பயன்படுத்துவது நல்லது.

வால்நட் ஆயில் அழகு குறிப்புகள்


நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும்.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம்.

• வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

• சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

• வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்



சிலருக்கு மேக்-அப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். மேக்-அப்பில் ஆயில் மேக்-அப் என்று ஒன்று உள்ளது. ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-அப் போடாமல், சாதாரண மேக்-அப் போட்டாலே எண்ணெய் வழியும்.

இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-அப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள் ஆகும். மேக்-அப் போடுவதற்கு முன்பு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• மேக்-அப் போடும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு கழுவும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-அப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.

• எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-அப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-அப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.

• மேக்-அப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-அப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

• மேக்-அப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

• எப்போதும் டிஸ்யூ பேப்பரை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை வைத்து அவ்வப்போது முகத்தை துடைத்தால், முகத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் மேக்-அப்பை கலைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்..

ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.

* கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

* நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன

* குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

* நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்

கழுத்து கருமை நிறம் மறைய


சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்

ஆப்பிள் பேஸ் பேக்

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம். 

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, இந்த கலவையை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம். 

* ஆப்பிள் விழுது 1 ஸ்பூன் எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 ஊற வைத்து பின் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக மறைவும். 

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு போல் இருக்கும். 

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை


விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.

• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.

• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.

• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.

• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.

கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்

• வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை சம அளவு கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

• வெந்தயம், குன்றிமணியை சம அளவு எடுத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஊறவைக்க வேண்டும். இந்த பொடி ஒரு வாரத்திற்கு நன்றாக ஊற வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

• மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி நிறம் மாறும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வரலாம்.

• ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிவும். இந்த எண்ணெயை தலையில் தினமும் தொடர்ந்து தேய்த்து வந்தால் கூந்தல் நீளமாக வளரும்.









எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள்

எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ…

• வெட் கிளென்சிங் டிஸ்ஸு முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை.

• ஃபவுன்டேஷன் : முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தைத் தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் ஸன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைக்கும் அத்துடன் வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.

• மஸ்காரா : மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரிக்கக் கூடியது. கண்களை பெரிதாக தோன்றவைக்கும் தன்மை இதற்கு உண்டு.

• லிப்ஸ்டிக் : இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுக்கும். உதடுகளுக்கும் கண் இமைக‌ளி‌ன் ‌மீது நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.

• காம்பேக்ட் : மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.














புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை குளியல்


எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நீரில் நீந்திக் குளித்த பிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.

இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால்களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது.

கோடை காலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின்னர் இந்த நீரை கொண்டு குளித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படும்.

மேலும் கோடை காலத்தில் உடலில் இருந்து வரும் வேர்வை நாற்றம் வராது. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி எடுத்து அதை முகம், உடல் மற்றும் கூந்தலுக்கு தேய்க்கவும். முகத்தில் தேய்க்கும் போது கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். 5 நிமிடம் கழித்து குளிக்கவும்.

நேரம் அதிகமாக இருக்கும் போது இந்த முறையில் குளிக்கலாம். இந்த எலுமிச்சை குளியல் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடியது. எலுமிச்சைப் பழச்சாறு கண்களில் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

சிலருக்கு சாறிலுள்ள அமிலத்தன்மை உடலுக்கு உகந்ததாக இருக்காது. உடலில் மென்மையான பாகங்களில் பட்டு சில நிமிடங்கள் வரை அதிக எரிச்சலை நீங்கள் உணர்வதாக இருந்தால், எதிர்காலத்தில் இக்குளியலைத் தவிர்த்து விடுவது நல்லது.

கோடை கால சரும பாராமரிப்பு

கோடை காலம் வந்துவிட்டது..சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

நமது வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே வெயில் தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட டானிங், சோர்வு, சரும வறட்சி ஆகியவற்றை தடுத்து, உங்களின் பொலிவை மீட்டெடுக்கலாம்.

• எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போலக் கலந்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும். இவ்வாறு வாரம் இரு முறை செய்தால் வெயிலினால் பாதிப்படைந்த உங்கள் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.

• கோடை காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்திற்கு உகந்தது முட்டை மாஸ்க். வெயிலில் இருந்து வீடு திரும்பியதும் உங்கள் முகத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் மாஸ்க் போல பூசுங்கள். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது தேன் கலந்துக்கொள்ளலாம். இந்த கலவை உங்கள முகத்தில் இருக்கும் சோர்வை போக்குவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் போக்கும்.

• தயிர் உங்களது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஒரு பாத்திரத்தில், தயிர், சிறிதளவு கடலை மாவு அல்லது முல்தானிமட்டி, அரைத்த ஆரஞ்சு தோல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கபடும்.

• வெள்ளரிக்காய் சாறை, துருவிய வெள்ளரிக்காயுடன் கலந்து வெயிலினால் பொலிவிழந்த சருமத்தின் மீது பூசினால் சருமம் குளுமை பெறுவதுடன், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.

• சோற்று கற்றாழையின் சாறை உங்கள் கைகள், பாதங்கள், கழுத்து பகுதி மற்றும் முகத்தில் பூசிக்கொள்ளலாம்.

• சூரிய கதிர்வீச்சால் பெரும்பாலானோருக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். முகத்தின் அழகை பாதிக்கும் இந்த கருவளையங்களை போக்கிட கண்களை மூடிக்கொண்டு உருளை கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்கலாம். உருளை கிழங்கு சாறையும் கூட கண்களை சுற்றி தடவலாம்.

வறண்ட கூந்தல் பொலிவு பெற வழிகள்


கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..

தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.

* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.

* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.

* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கண்களின் அழகைப் பராமரிக்க

நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...

• தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

• போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

• கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

• கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

எண்ணெய்ப் பசை கூந்தல் பராமரிப்பு

ஒருவரின் கூந்தல் எந்ததன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடை பிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். எண்ணெய்ப் பசை தன்மையுள்ள கூந்தலுக்கான சில வழிகள்.....

தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் காணப்படுகிறது. கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும்.

* எண்ணெய்ப் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக்குக் குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும்.

* எண்ணெய்த் தன்மை கூந்தலுடையவ ர்கள் மருதாணி அல்லது எலுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.

* வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பிசு பிசுப்பு நீங்கும்.

* கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய்பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய்ப் பசை கூந்தலுடையவர்கள் உணவில் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

- இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் கூந்தல் பராமரியுங்கள்.

தலைமுறையினரை கவரும் ஹேர் டை

நரையை மறைக்க ஹேர் டை என்ற காலம் போய், அழகை மேம்படுத்த ஹேர் டை என்ற காலம் வந்துவிட்டது. இப்போது நம் நாட்டிலும் இளம் தலைமுறையினரிடம் தலைமுடியை டை செய்து கொள்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஹேர் டை பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு செயல்பட்டால் அது உங்கள் தோற்றத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

நீங்கள் முதல் முறையாக முடியை டை செய்யுமுன் ஒரு அழகு நிலையம் (ப்யூட்டி பார்லர்) சென்று அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையைப் பெறவும். உங்கள் நிறத்திற்கேற்ற, உங்கள் முடியின் அமைப்புக்குத் தகுந்த நிறம் என்ன என்பது ஒரு அழகுக் கலை நிபுணரால்தான் கூற முடியும்.

அழகு நிலையம் செல்லாமல் நீங்களே முடிவெடுக்க விரும்பினால், உங்கள் முடியின் ஒரு சிறிய பாகத்தை டை செய்து பார்க்கவும். ஹேர் டையின் நிறம் முடிவாகிவிட்டது. வீடோ அல்லது அழகு நிலையமோ, முதலில் ‘அலர்ஜி டெஸ்ட்’ செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஹேர் டை உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் முடியை முழுவதாக டை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. தலையின் முன் பக்கத்திலோ பின் பக்கத்திலோ மேலே இருக்கும் சில முடிகளை மட்டும் “ஹை லைட்” செய்யலாம். இதை பராமரிப்பதும் எளிது. டை செய்த முடிக்கு அதிக பராமரிப்பு தேவை என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கேற்ற ஷாம்பூ, கண்டிஷனர் ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.

உங்கள் முடியை மருதாணியால் டை செய்திருந்தால், அந்த நிறம் முழுமையாக மாறும் வரை கெமிக்கல் ஹேர் டை உபயோகிப்பதை தவிர்க்கவும். குளித்த பிறகு ஹேர் ட்ரையர் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முடி அதிகமாக சூடானால் உங்கள் டையின் நிறம் மாறி, ஆங்காங்கே வெளுத்து அசிங்கமாகத் தோற்றமளிக்கும்.

நாட்கள் செல்லச் செல்ல உங்கள் முடி வளருவதால், டை செய்த முடியில் புதிதாக வளர்ந்த முடி வித்தியாசமாகத் தோற்றமளிக்கும். அதனால் இரு வாரத்துக்கு ஒரு முறை வளர்ந்த முடியை ‘டச் அப்’ செய்து கொண்டால் அழகாக இருக்கும்.

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க ஸ்கரப்


பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.

உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் உதட்டுக்கு மேல், காதுகளுக்கு அருகில் மற்றும் தாடை பகுதிகளில் அதிகமாக வளரும் இத்தகைய ரோமைங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும் முறையான குறிப்புகளை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்...

• சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை படிப்படியாக மறையும்.

• சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

• சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.

கோடைக்கு ஏற்ற ஆடை...



 மனித வாழ்க்கையில் கடந்து வரும் பல்வேறு பருவங்கள் எப்படி தவிர்க்க முடியாததோ அதுபோல் இயற்கையில் மாறிவரும் பருவ காலங்களும் தவிர்க்க முடியாதது. மனித பருவங்களை கொண்டாடுவதுபோல், இயற்கையின் பருவங்களையும் கொண்டாட வேண்டும்.

அந்த வகையில் இப்போது நாம் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறது, மீண்டும் ஒரு கோடை! “கோடை என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், வழியும் வியர்வைதான் நினைவுக்கு வரும். அதனால் சவுகரியமாக இருக்கமுடியாது. விதவிதமாக ஆடைகள் அணியமுடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

உண்மை அதுவல்ல. கோடை காலத்திலும் அழகழகாக ஜொலிக்கும் உடைகளை அணிந்து ஆனந்தமாக வாழலாம். “கோடை என்றாலே காட்டன் ஆடைகளைத்தான் அணியவேண்டும் என்ற நிலையில் இருந்து மக்கள் மாறிவிட்டார்கள். ‘இந்த சம்மருக்கு புதிதாய் என்ன வந்திருக்கிறது’ என்று புதுப்புது பேஷன் உடைகளை தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்களது ஆசையை புரிந்துகொண்ட டிசைனர்கள் விதவிதமாக கோடைக்கால ஆடைகளை வடிவமைத்து நகரத்திற்கு நகரம், பேஷன் ஷோ நடத்தி வெளியிட்டுக்கொண்றார்கள். இந்த கோடையில் பெண்கள் விரும்பும் சில வகை பேஷன் உடைகள் இதோ...

மோனோ குரோமேட்டிக் ஆடை:.............பொதுவாக கோடை காலத்திற்கு ஏற்றது, வெள்ளை நிறம் என்பார்கள். அது சூரிய வெப்பத்தை வெளித்தள்ளும். கறுப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும். அதனால் அது கோடைக்கு பொருத்தமற்றது என் பார்கள். இந்த மோனோ குரோமேட்டிக் ஆடைகள் கறுப்பும், வெள்ளையும் கலந்த கலவை.

பொதுவாக கட்டம்போட்ட ‘செக்’ ஆடைகளுக்கு சம்மரில் அதிக மவுசு ஏற்படும். அதை ஈடுசெய்யும் விதத்தில் இந்த கோடைக்கு பிளாக் அண்ட் ஒயிட் செக் உடைகள் பேஷனாகி இருக்கிறது. பெண்கள் அதிக அளவில் இதை விரும்புகிறார்கள்.

ஸ்டிரைப்ஸ்: இந்த வார்த்தைக்கு பல்வேறு நிறத்திலான கோடுகள், நீண்டு குறுகிய கோடுகள் என்று அர்த்தம். இந்த ஆடைகளும் கோடுகளால் நிரம்பியது. நம் நாட்டில் இப்போது பெண்கள் உடல் பருத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வகை நேர் கோடு உடைகள் அவர்களை ஓரளவு கச்சிதமாக காட்டுவதால், ‘ஸ்டிரைப்ஸ்’க்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

குள்ளமாக இருப்பவர்களும் ‘நேர் கோடு’ ஆடைகளை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் குறுக்கு கோடு கொண்ட ஆடைகளையும், கச்சிதமான உடல் வாகுவைக்கொண்ட பெண்கள் ஏற்ற- இறக்கமான கோடுகளைக் கொண்ட ஆடைகளையும் கோடைக்கு தேர்வு செய்கிறார்கள்.

கலர் பிரேக்: ‘இந்த கலருக்கு இந்த கலர்தான் பொருத்தமாக இருக்கும்’ என்ற பொதுவாக கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படியல்ல, அதற்கு நேர் எதிரான கலரைக்கூட அணிந்து ஜமாய்க்கலாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்த ‘கலர் பிரேக்’ பேஷன்.

இதில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், கட்டமைப்பான உடல்வாகு இல்லாதவர்களையும், அந்த குறைபாடு தெரியாத அளவிற்கு இந்த வகை ஆடைகள் நேர்த்தியாகக்காட்டும். ஆப்பிள் வகை உடல்வாகு கொண்ட பெண்களின் உடலின் மேல் பகுதி குண்டாகவும், கீழ்ப்பகுதி ஒல்லியாகவும் இருக்கும்.

அவர்கள் தங்களுக்கான கோடைகால உடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மேல் பகுதி ஆடை அடர்த்தியான நிறத்திலும், கீழ்ப்பகுதி ஆடை இளநிறத்தில் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அழகை காட்டும் ஆடை...

கோடை என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், வழியும் வியர்வைதான் நினைவுக்கு வரும். அதனால் சவுகரியமாக இருக்கமுடியாது. விதவிதமாக ஆடைகள் அணியமுடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. கோடை காலத்திலும் அழகழகாக ஜொலிக்கும் உடைகளை அணிந்து ஆனந்தமாக வாழலாம்.

பென்சில் ஸ்கர்ட்: இந்த பேஷன் உடைகள் இடையை ‘கொடி இடையாகக்’ காட்டும். உடையில் முக்கியத்துவம் கொடுக்கவிரும்பும் பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுத்துக் கொள்ளலாம். கையிலோ, இடுப்பிலோ பெரும்பாலானவர்கள் ‘ஸ்லிட்’ கட் கொடுப்பது இப்போது பேஷனாக இருக்கிறது. உடலில் எந்த பகுதி பார்க்க அழகாக இருக்கிறதோ, அந்த பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுப்பது நல்லது.

பெப்லம்ஸ்: உடலில் பெண்மைத்தன்மையை அதிகரித்துக்காட்ட விரும்புகிற வர்கள் இந்த வகை பேஷனை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். இதற்கு கேடியா பிளவுஸ் அணிந்தால் இடுப்புப் பகுதி வளைவு நெளிவுகளை சிறப்பாக்கிக்காட்டும். இதற்கு ஜோடியாக பென்சில் ஸ்கர்ட் அல்லது பிளாசோஸ் வகை பேண்ட் அணியலாம்.

சிம்பிள் ஸ்கர்ட்: கோடைகாலத்தில் விருந்து, விழாக்கள் அதிகம் நடக்கும். அதில் கலந்துகொள்ளும் பெண்கள் இந்த வகை ஆடைகளை அணியலாம். கோடைகாலத்தில் கல்யாண விருந்துகளில் நடனமாட இந்த ஆடை காற்றோட்டமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இந்த வகை ஆடைகளை இளம் பெண்கள் இப்போது அதிக அளவில் வடிவமைத்துக் கேட்கிறார்கள். ‘நியான் கலர்ஸ்’ பெண்களை அதிகம் கவர்கிறது.

சிக்னல் விளக்கு நிறங்களான சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய அடர் நிறங்களைத்தான் நியான் கலர்ஸ் என்று கூறுகிறோம். இந்த மூன்று வகை நிறங்களில்தான் கைப்பைகள், காலணிகள், வளையல்கள் அதிகம் உருவாகிறது. பெண்களை ஈர்க்கும் இந்த நிறங்களில் தயாராகும் கோடை ஆடைகள் பெண்களை அதிகம் கவர்கிறது.

கீழ் உடை, மேல் உடை என்று தனித்தனியாக இல்லாமல் கவுன்போல் ஒரே உடையாக உருவாக்கப்படும் ஜம் சூட்ஸ், கோடையில் அதிகமான பெண்களால் விரும்பப்படுகிறது. காற்றோட்டமான இந்த ஆடையை   பழைய காலத்தில் கம்பெனி பணியாளர்கள் அணிந்தார்கள். இப்போது அது பெண்கள் விரும்பும் பேஷனாகி இருக்கிறது.

அனிமல் பிரிண்ட்ஸ், ஜங்கிள் பிரிண்ட்ஸ், பூ டிசைன் உடைகளும் கோடையில் புகழ்பெறுகிறது. கோடை காலத்தில் மிருகங்களை பார்க்கச் செல்வது, காட்டுப்பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது, பூந்தோட்டங்களை கண்டு ரசிப்பது போன்றவைகளில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த ஆர்வத்தை பயன்படுத்தி அதையே கோடைகால டிசைன்களாக்கி இருக்கிறார்கள். வேட்டி போல் அணியக்கூடிய டோத்தி சல்வார் கோடையில் பெருமளவு பெண்களால் விரும்பப்படுகிறது.

இப்போது இந்தியா முழுவதும் அதிக செல்வாக்கு பெற்றிருப்பது, ‘ட்ரைபல் அசென்ஸ்’ என்ற ஆதிவாசிகள் பேஷன் உடை. ஆதிவாசிகள் தங்கள் பகுதியில் கிடைக்கும் மணிகள், மாலைகள், கண்ணாடிகள், வளையல்களை பயன்படுத்தி இந்த அழ கான உடையை தயாரிப்பார்கள்.

கோடை கால ஆடைகள் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு டிப்ஸ்...........

காட்டன், ஷிபான், ஜார்ஜெட், லேசஸ் போன்ற துணி வகைகளில் உருவாக்கப்படும் ஆடைகளை வாங்கி அணியுங்கள். அவை அதிக எடை இல்லாமல் காற்றோட்டமாக இருக்கும். முன்பு இள நிறத்திலான கோடை கால உடைகளையே பெண்கள் விரும்பினார்கள்.

இப்போது நியான் கலர்ஸ் உடைகளும் கோடைகால பேஷனாக மாறிவிட்டது. பெர்பியூம் அளவை குறைத்து அதற்கு பதிலாக டியோடரன்ட்டை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது சன் கிளாஸ் அணிந்துகொள்ள வேண்டும்.

காலணிகள் திறந்த நிலையில் இருந்தால் காற்றோட்டம் கிடைக்கும். காலணிகள் மணிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தால் பார்க்க அழகுதரும். கோடையில் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரங்கள்



பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் கூந்தல் அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்.....

• நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர் ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் தங்களின் தலையில் நடு வாகிடு எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

• சதுர முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்து கொள்ளுங்கள். குட்டை முடி உள்ளவராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம்.

• வட்ட முகமுடையவர்கள் உங்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட் னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி சீவுங்கள்.

தலை முதல் கால் வரை இயற்கை அழகு குறிப்புகள்


• வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.

• முகத்தை தினமும் நான்கு முதல் ஐந்து முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

• முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு வாரம் ஒரு முறை பெண்கள் ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

•  முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்க மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, இந்த பழங்களை கொண்டு  மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலிவுறும்.

• தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

• சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

• எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

• கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். 

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீங்க…

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை என்னவென்று பார்க்கலாம்..

* உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

* கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

* எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர்செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

* தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

* பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

- மேற்கூறிய டிப்ஸ்களையெல்லாம் செய்துவந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி, அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.

முகத்தில் உள்ள சருமத்துளைகளை போக்க



சருமப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகத்தில் ஆங்காங்கு காணப்படும் ஓட்டைகள். இவை சருமத்துளைகள் என்று அழைப்போம். சாதாரணமாக இது கண்ணுக்கு தெரியாதவாறு இருக்கும். ஆனால் அத்தகைய சருமத்துளைகளானது கண்ணுக்கு தெரியாத அளவு இருக்கும் வரை ஒரு கவலையும் இல்லை.

அதுவே பெரிய அளவில் உருவாகும் போது முக அழகானது பாதிப்படைகிறது. முகத்திற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் இருக்கும் படியாக வைத்தல், சருமத்தை சரியாக பராமரிக்கால் இருத்தல் போன்ற பல காரணங்களால் சருமத்துளைகள் வருகின்றன.

வயது அதிகரிக்க அதிகரிக்க, தோல்களின் மீட்சி குறைவதால், இந்த துவாரங்கள் பெரிதாகும். முகத்தில் ஏற்படும் துவாரங்கள் கண்டிப்பாக நம்மை பாதிக்கும்.   இத்தகைய பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க சில வழிகள் உள்ளன. அவை.....

• தேன், துவாரங்களின் அளவை குறைக்க உதவும். 2-3 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மூலிகைத் தேனை, முகத்தில் நன்றாக தடவிக் கொண்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்தப் பின், 10 நிமிடங்கள் காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

• ஐஸ் கட்டிகளை ஒரு காட்டன் துணியில் சுருட்டி, முகத்தின் மேல் தேய்ப்பது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். ஐஸ் கட்டிகள் துவாரங்களை இறுக்கமாக்கும். இதனை தினசரி காலை முகத்தில் தடவ வேண்டும். மேலும் இது சரும மெழுகின் உற்பத்தி அளவை இயல்பு நிலையில் வைத்திருக்க உதவும்.

• 5 ஸ்பூன் தேனையும், 2 ஸ்பூன் ஓட்ஸ் கஞ்சியையும், 2 ஸ்பூன் பால் பொடியுடன் கலந்து இந்த கலவையை சமமாக முகத்தில் தடவி, வட்டமான முறையில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இறுதியில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தவறாமல் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அழகான உதடு வேண்டுமா?


முகத்தை அழகாய்க் காட்டி, வனப்பைக் கூட்டுவதில் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. உதடுகளில் வறட்சி, கருத்துப் போதல், ஈரப்பசை இன்மை போன்ற காரணங்களால் உதட்டின் அழகு கெடும். தரமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது தோல் கருப்பாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

வேதிப்பொருட்கள் கலந்த பழச்சாறு குடிப்பதாலும் சில வகைப் பழங்கள், கொட்டைகளின் சாறு உதட்டில் படுவதாலும் வைட்டமின் பி குறைபாட்டினாலும் உதடு புண்ணாகி, அந்த இடம் கருத்துப் போகலாம். புண் இருந்தால், தினமும் தேங்காய் எண்ணெய் தடவினால் புண்கள் விரைவாக ஆறும்.

பல் துலக்கும்போதும், முகத்துக்கு ஸ்க்ரப்பிங் செய்யும்போதும், உதடுகளை லேசாகத் தடவிவிட்டால், உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும்கூட உதட்டுக்கு நல்ல நிறம் கொடுக்கும்.

உதட்டு நிறம் மாற தயிர், பாலாடையையும் உபயோகிக்கலாம். உதட்டில் தேன் தடவுவதன் மூலம், வறட்சி நீங்கி, பளிச்சிட வைக்கும். உலர் திராட்சையின் தோலை உரித்து, உதட்டின் மேல் தடவிவர, உதட்டில் பளபளப்புக் கூடும்.

சுருட்டை முடியை பராமரிக்க

ஒரு சிலருக்குதான் இயற்கையிலேயே கருமையான சுருட்டை, சுருட்டையாக கூந்தல் அமையும். இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகையும் அதிகரித்துக் காட்டும். ஆனால் சுருட்டை முடியை பராமரிப்பு மிகவும் கடினம். சுருட்டை முடியை பராமரிக்க சில ஆலோசனைகளை இதோ.

• சுருட்டை கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க வாரம் ஒருமுறை அதற்கு தனியான சிகிச்சை அளிப்பது நல்லது.ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொண்டு கூந்தலை நன்றாக விரித்து விட்டுக் கொள்ளவும். வெண்ணையை விரலில் எடுத்து கூந்தலின் வேர்கள் வரை படுமாறு தேய்த்து நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைக்கவும். கூந்தலை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் உடைந்து உதிர்வது குறையும்.

• சுருட்டை முடி உள்ளவர்கள் சரியான ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம். நார்மலான, நேரான கூந்தல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டீசனரையே பயன்படுத்தக்கூடாது.

• தினசரி தலைக்கு குளித்தால் இயற்கையிலே கூந்தலில் உள்ள எண்ணெய் தன்மையை இழந்து விடும். இதனால் தலைமுடி வறண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக சுருட்டை முடிக்கு அதிக எண்ணெய் தன்மை தேவை. அதிலும் தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தல் சிக்கல் ஏற்படுவது அதிகமாகும்.

• சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும். அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும்.

• தலைக்கு குளித்து விட்டு அதிகநேரம் தலையில் டவல் கட்டியிருக்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதோடு கூந்தல் அதிகம் வறண்டு உதிர வாய்ப்புள்ளது.

இளநரையை போக்க வழிகள்


உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை முடி நரைக்கும். சமச்சீரற்ற உணவுமுறை, ௭ண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்போ, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது.

இன்றைக்கு 15 வயது முதலே ஆண், பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

- பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.

- தேங்காய் ௭ண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த ௭ண்ணெய்யை தினசரி தலைக்கு தேய்த்து வர கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும்.

- உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு ௭டுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த ௭ண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை படிப்படியாக மாறுவதை காணலாம்.

- இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.

- தேங்காய் ௭ண்ணெயில் ௭லுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

கைகளுக்கு முக்கியத்தும் கொடுங்க

கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்கள் பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளை செய்கிறார்கள். ஆனால் அதன் பின் கைகளுக்கு சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம்.

இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ஏற்படுகின்றன. முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.

குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளை பின்பற்றிவந்தால் உங்கள் கைகள் பார்க்க அழகாகவும், மென்மையாகவும் மாறுவதை காணலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.....

வாரம் ஒரு முறை வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 20 நிமிடங்கள் வைத்திருந்த பின்னர் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும்.

கைகளின் தோல் வறட்சி உடையவர்கள் கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.

குளிர் காலங்களில் கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும்.

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

குங்குமப் பூவின் அழகு குறிப்புகள்

விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்…

- குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் படிப்படியாக குறைவதை காணலாம். இவ்வாறு வாரம் இரு முறை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

- குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைத்து இந்த கலவையை உதட்டில் தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் போல மாறுவதை காணலாம். இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.

- நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றறில் குங்குமப் பூ-வெண்ணை கலவையை போட்டு வந்தால் நகங்களை சீர்படுத்தி இழந்த அழகை மீண்டும் பெறலாம்

- ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்’ அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வந்தால் பலன் கிடைப்பது உறுதி.

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்...


தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.  தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.

இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.  கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்..

• உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

• எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது.  எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

வாட்ச் பராமரிக்கும் முறைகள்

தற்போது இளையதலைமுறையினர் அனைவரும் விதவிதமான வாட்ச் அணிய விரும்பம் உள்ளவர்களாக உள்ளனர். அதுவும் பெண்கள் சேலை, சுடிதார், பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர். லெதர், மெட்டல், கோல்ட் என பல மாடல்கள் வைத்திருப்பார்கள்.

ஆனால் அவர்கள் எல்லாமே தினமும் உபயோகிப்பதில்லை. சிலவாட்ச்கள் பீரோவில் தூங்கும். அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்து பார்க்கும் போது பேட்டரி போய் விடும். இல்லை கருத்துவிடும். நிறைய நாட்கள் உபயோகிக்காமல் வைத்திருக்கும் வாட்சின் பேட்டரி போகாமல் இருக்க வாட்சில் டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும்.

அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாமல் நின்றுவிடும். அப்படியே பீரோவில் வைத்து விட்டு பின்னர் நாம் எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டுகொள்ளலாம். இவ்வாறு செய்தால் வாட்ச் நிறைய நாட்கள் பழுதாகாமல் இருக்கும்.

செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் வாட்சில் பட்டால் கருத்து வெளுத்து போய்விடும். எனவே வாட்சை எல்லா பொருட்களுடனும் போட்டு வைக்காமல் தனியாக அதற்குறிய பாக்ஸிலோ அல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைத்தால் கருக்காமல் ரொம்ப நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

முகத்திற்கான எளிய அழகு குறிப்புகள்



முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்கமின்றி இருக்கவும் வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்.....  

* தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் கேரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா ஒரு ஸ்பூன்  இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.  

* பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் பாதாம் எண்ணை ஒரு ஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவி வரவும்.  

* வெள்ளரிக்காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கருப்பு நிற மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.  

* நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.  

* கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமாக மாறும்..  

* ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் கேரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும்.

வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும். சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.  

* பப்பாளிப்பழ சாற்றுடன் பால் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்  

* ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் என்பது ஒருவகை இறந்த பொருள். அதனால்தான் முடியை வெட்டும்போது நமக்கு வலி தெரிவதில்லை. கூந்தல் கெராட்டின் என்ற பொருளால் ஆனது. கூந்தல் வளர்ச்சிக்கு தாதுச் சத்துக்கள் மிக முக்கியம். இரும்புச் சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், போரான், கால்சியம், தாமிரம் உட்பட நிறைய சத்துக்கள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  

கூந்தலுக்கும் அதன் மேல் பூச்சில் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. கூந்தலின் ஆரோக்கியம் என்பது உள்ளே உட்கொள்ளும் உணவுகளையே பொறுத்தது. ஐ ஷேடோ தடவினால் பார்வைத் திறன் அதிகரிக்கும் என்ற மாதிரிதான் எண்ணெய் தடவினால் கூந்தல் வளரும் என்பதும்.  

ஆனாலும் கூந்தலுக்கு எண்ணெய் தடவுகிறோம் அது மண்டையின் ஆரோக்கியத்துக்காக. செடிகள் வளர எப்படித் தரையை உரம் போட்டு, உழுது வைக்கிறோமோ அதே மாதிரிதான் கூந்தல் வளர மண்டையோட்டுப் பகுதியை எண்ணெய் தடவி ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.  

கூந்தலுக்கு தினசரி எண்ணெய் தடவவேண்டும் என்று அவசியமில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை தடவினால் கூடப் போதும். அதையும் ஒரே ஒரு நாள் வைத்திருந்துவிட்டு அடுத்த நாள் அலசிவிடலாம். தினசரி 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது சகஜமான விஷயம்தான்.

80 முதல் 100, அதற்கு மேல் முடிகள் உதிரும்போது, அதை ஆரோக்கியமின்மையின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும்.

தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது. சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது.

நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்

அழகான சருமத்திற்கு ரெட் ஒயின்

ஸ்ட்ராங் ரெட் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு அலர்ஜி மற்றும் இயற்கையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலத்துடன் கலந்து வினைபுரிவதால், அவை பொலிவான சருமத்தை மட்டுமின்றி, சருமத்தை நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒயினில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால் இருப்பதால், அவற்றை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதிப்படைந்திருக்கும் செல்களை சரிசெய்து, முதுமைத் தோற்றத்தை தடுக்கும்.

• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த பலனைத் தரக்கூடியது ரெட் ஒயின். ரெட் ஒயினை பயன்படுத்தும் போது, அது சருமத்தை ஈரப்பசையுடனும், மென்மையாகவும், குளிர்ச்சியுடனும் வைக்கும்.

• ரெட் ஒயினை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். அதுவும் அதனை பஞ்சில் நனைத்து, சருமத்தை துடைத்தால், அவை சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு, மாசின்றி வைத்துக் கொள்ளும். மேலும் பருக்கள் வராமலும் தடுக்கும்.

• ஒரு கப் ரெட் ஒயினை, ஒரு கப் தவிட்டுடன் சேர்த்து 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கொண்டு முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமத்துளைகளில் உள்ள மாசுக்கள் அனைத்தும் நீங்கிவிடுவதோடு, அதிகப்படியான எண்ணெயும் அகன்றுவிடும்.

• ரெட் ஒயின் சருமத்தை சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சிறந்த பாதுகாப்பு தரக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கண் அழகிற்கான மேக்கப்

கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது.

ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.

* பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

* கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது.

* மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும்.

* பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவது நல்லது.  முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வேர்குரு மறைய வழிகள்


• மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பின் வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில், இந்தக் குழம்பைப் பூசி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.

• சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.

• பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடங்களின் மீது போர்த்துமாறு மூடிவிடவும். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதும் உறிஞ்சும் வரை காத்திருக்கவும். இம்முறையை ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்யவும். இல்லையெனில் வேர்க்குரு உள்ள இடத்தின் மீது குளிர்ந்த நீரை கொண்டு கழுவலாம். வேர்க்குருவின் அரிப்பிற்கும், எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும் முறை இதுவே.

• ஆலமரப்பட்டை வேர்க்குருவை போக்க சிறந்த பொருளாக பயன்படுகிறது. காய்ந்த ஆலமரப் பட்டைகளை எடுத்துக் நன்கு பொடியாக அரைக்கவும். இப்பொடியை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். இது வேர்க்குருவின் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும்.

சரும அழகை காக்கும் க்ரீன் டீ

க்ரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த க்ரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்....

• க்ரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும்.

அதற்கு க்ரீன் டீயை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தால் அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும். மேலும் சருமத்தை தாக்கும் ஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

• பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே க்ரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

• எப்போது சருமம் பொலிவின்றி காணப்படுகிறதோ அதற்கு காரணம் டாக்ஸின்கள் அதிகம் தான்.ஆகவே இத்தகைய பிரச்சனையை முற்றிலும் போக்கும் திறன் க்ரீன் டீயின் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் க்ரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

• கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு க்ரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் க்ரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் தடுக்கும்

சரும அழகை காக்கும் க்ரீன் டீ

க்ரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த க்ரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்....

• க்ரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும்.

அதற்கு க்ரீன் டீயை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தால் அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும். மேலும் சருமத்தை தாக்கும் ஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

• பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே க்ரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

• எப்போது சருமம் பொலிவின்றி காணப்படுகிறதோ அதற்கு காரணம் டாக்ஸின்கள் அதிகம் தான்.ஆகவே இத்தகைய பிரச்சனையை முற்றிலும் போக்கும் திறன் க்ரீன் டீயின் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் க்ரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

• கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு க்ரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் க்ரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் தடுக்கும்

மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்

மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது.  இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். மேலும் அக்காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும், தங்கள் அழகைப் பராமரிக்க மஞ்சள் தூளைத் தான் பயன்படுத்தினார்கள்.

பல அழகுப் பொருட்களில் மஞ்சள் தூளும் ஒரு பொருளாக உள்ளது. இப்போது இயற்கையாக முறையில் வீட்டிலேயே மஞ்சள் தூளைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்று பார்க்கலாம்.

• தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூளை சம அளவில் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

• உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.

• இப்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் முகப்பரு பெரும் பிரச்சனையாக உள்ளது. மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..

• பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.

• மஞ்சள் தூளில் எலுமிச்சை சாற்ளை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் கருத்து போன சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென்மையாக மாறும். இதனை தினமும் செய்து வந்தால் நாளடைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்


சருமத்திலேயே சென்சிட்டிவ் சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அத்தகைய சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தை பராமரிக்க ஒருசில பொருட்களே உள்ளன.

வேறு ஏதாவது பயன்படுத்தினால், சருமத்தில் நிறைய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களின் சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

• ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

• சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருளாக பயன்படுகிறது. அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

• எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னரே இந்த முறையை செய்வது நல்லது.

• வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.

• டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் படிப்படியாக பொலிவு பெருவதை காணலாம்.


சரும அலர்ஜியை போக்க வழிகள்

பெண்கள் சிலருக்கு நெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம் தான்.

மேலும் தலையில் உள்ள பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது இந்தக் காரணங்களால் கூட நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.

* ரோஜா இதழ்களை நன்கு அரைத்து அதனுடன் அதே அளவு சந்தனம் சேர்த்துக் நன்கு குழைக்க வேண்டும். அதை பொரி இருக்கும் இடங்களில் போட்டு, இருபது நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.   ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வந்தால் பொரிகள் படிப்படியாக மறையத் தொடங்கும்.

* கசகசா - 2 டீஸ்பூன், கருந்துளசி இலை, 10 இவ்விரண்டையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெட்டிவேரை கொதிநீரில் போட்டு வையுங்கள்.   மெல்லிய வெள்ளை துணியை "ஜில்" தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை "பத்து" போல் போடுங்கள்.

15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, "பொரிகளை" அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும் தன்மை கொண்டது.

மேலும் துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.  

அழகான கன்னம் வேண்டுமா?


முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம்.

எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும்.

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றிவைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும். சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும். கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பையும் தரும். ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும்.

அதோடு தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும். ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப்பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங்கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக்கும்.

கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர்வு


தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!

• ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

• ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மென்மையாக மாறுவதை காணலாம்.

• வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் மிருதுவாகும்.

• மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

• உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.

• டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

கரு வளையங்கள் நீங்க

இரும்பு சத்து குறைகிற போது, பரம்பரை வழியால், போதிய அளவு தூக்கமின்மையால், அளவுக்கதிகமாக கண்களுக்கு வேலை கொடுப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டி.வி முன்னாடி உட்கார்ந்திருப்பது, போஷாக்கில்லாத ஆகாரம் சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கரு வளையம் வருகிறது.

புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை கண்டிப்பாக இருக்கும். சருமத்திற்குத் தேவையான வைட்டமின் சி-யை இந்தப் பழக்கங்கள் குறைப்பதால் அதன் விளைவாகக் கருவளையங்கள் தோன்றுகின்றன.

கண் பார்வையில் கோளாறு உள்ளவர்களுக்குக் கூட சில சமயம் இதுமாதிரி கருவளையங்கள் ஏற்படலாம். எனவே கண் பார்வைக்கான சிகிச்சை சரியாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்தப் பிரச்னை குணமாக வாய்ப்புண்டு.  

தூங்கும் போது தலை கீழாகவும், கால்கள் மேலாகவும் இருக்கும்படி தூங்கினால் முகத்திற்கு இரத்த ஒட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதன் விளைவாகவும் கரு வளையங்கள் குறையும். தலையணை இல்லாமல் தூங்கும் பழக்கமும் கருவளையங்களைக் குணமாக்குவதில் உதவும்.  

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகக் கண்களில் போடப்பட்ட மேக்கப்பை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கருவளையங்கள் கண்டிப்பாக வரும்.  கண்களுக்கு உபயோகிக்கும் மேக்கப் சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.  

இரும்புச் சத்தும், வைட்டமின்களும் அதிகமுள்ள உணவுகள் நிறைய சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். வெயிலில் வெளியே போகும் போது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள் அணிந்து செல்ல வேண்டும்.   மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கருவளையங்கள் வராமலிருக்க மிக முக்கியம்.

கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

• முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.

சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.

கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.

பூசணிக்காய் ஃபேஸ் பேக்

பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

• பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.

• முகத்தில் உள்ள பருக்கள் நீங்க பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால்முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.

• பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவு பெரும்

• மசித்த பூசணிக்காயில், கடலை மாவை சேர்த்து, சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் நல்ல பலனைத் தரும். அதிலும் இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் மாஸ்க்


ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று தான் பார்த்திருப்போம். ஆனால் அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சருமத்தை அழகாக்கவும் பெரிதும் பயன்படுகின்றன. இந்த பழத்தில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.  

ஆகவே இந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து சருமத்திற்கு ஒருசில ஃபேஸ் மாஸ்க் செய்தால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் மற்ற கிருமிகள் நீங்கி, சருமம் பட்டுப் போன்று இருக்கும். இப்போது இந்த ஸ்ட்ராபெர்ரியை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் செய்யலாம் என்று பார்ப்போம்.....  

• ஸ்ட்ராபெர்ரி போன்ற அழகான நிறத்தில் கன்னத்தை பெறுவதற்கு, 3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் சருமமும் நன்கு அழகாக காணப்படும்.  

• எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு சூப்பர் காம்பினேஷன். அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சுத்தமாக காணப்படும்.  

• சருமம் நன்கு இறுக்கத்தோடு, இளமைப் போன்று காணப்படுவதற்கு, 3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவிட வேண்டும்.  

• எந்த ஒரு பொருளையும் கலக்காமல், வெறும் ஸ்ட்ராபெர்ரியை வைத்துக் கூட, சருமத்தை பொலிவாக்கலாம். இதற்கு ஸ்ட்ராபெர்ரியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவ வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையால், சருமம் களங்கமின்றி சுத்தமாக, அழகாகக் காணப்படும்.

வோட்கா பேஷியல்


சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன. இதுவும் வோட்கா வைத்து செய்யும் பேசியல் சருமத்தை பொலிவாக்குகிறது..

இதர ஆல்கஹால் பேஷியல் அயிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.

காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

படிப்படியாக உங்கள் தோல் மிருதுவாவதை காணலாம். வோட்கா பேஷியல் முடித்து விட்டு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். உங்களால் உங்களையே அடையாளம் தெரியாது.

பட்டு போல் பளபளப்பான கூந்தல்.... .


முடி உதிர்தல், இப்போது ஏராளமான பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் விஷயமாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் விதமாக அறிமுகமாகி இருக்கிறது, மீஸோதெரபி. இது பிரான்ஸ் நாட்டு அழகு சிகிச்சை முறையாகும். இந்த தெரபி மூலம் முடிஉதிர்வது தடுக்கப்படும்.

மண்டையோடு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியையும் துரிதப்படுத்தும் என்கிறார்கள். டி.டி.எச். என்ற ஹார்மோனின் பற்றாக்குறைதான் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. மீஸோதெரபி செய்வது மூலம் இந்த ஹார்மோனின் அளவு உடலில் அதிகரிக்கும்.

இது முடி பலப்படவும், வளரவும் துணை புரிகிறது. மீஸோதெரபி மண்டையோட்டில் உள்ள சரும அடுக்குக்கு வைட்டமின் ஈ, ஏ, அமினோ அமிலம், சில தாது சத்துக்களை அளிக்கிறது. மருத்துவகுணமும் இந்த தெரபியில் இருக்கிறது. இந்த தெரபி ஊசியை பயன்படுத்தி கொடுக்கப்படுகிறது. ஆனால் வலிக்காது.

ஊசியால் குத்துவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. இந்த தெரபியை 8 முதல் 10 தடவை செய்துகொள்ளவேண்டும். முதலில் வாரத்தில் ஒரு தடவை என்று ஆரம்பித்து, பின்பு மாதத்தில் ஒருமுறை என்று ஆக்குவார்கள்.

தினமும் 50 முதல் 100 முடிகள் உதிர்வதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குமேல் உதிர்ந்தால் உடனே கவனிக்கவேண்டும். கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள் தங்களது அன்றாட உணவு பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சமச்சீரான சத்துணவுகளை சாப்பிடவேண்டும்.

காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். கீரை மற்றும் மாமிச உணவுகளையும் சாப்பிடலாம். வைட்டமின் சி, சத்து அடங்கிய உணவுப்பொருட்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். பப்பாளி, எலுமிச்சை, ஸ்டாபெர்ரி, காலிபிளவர், கொய்யா, ப்ராக்கோலி போன்றவைகளில் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது.

அதனால் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலில் ஜீரண சக்தி நன்றாக இருக்கவேண்டும். சத்துணவுகளை சாப்பிடுவது மட்டுமல்ல, சரியான நேரத்தில் தேவையான அளவில் அவைகளை உட்கொள்ளவும் வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே சில சுய சிகிச்சைகளை செய்வதும் கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியும். பூண்டு, பெரிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருந்து சாறு எடுத்து அதனை மண்டையோட்டில் பூசவேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த சாறை பூசிக்கொள்கிறவர்கள், முதல் நாள் இரவில் பூசி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலையை கழுவி குளித்திடவேண்டும். ‘கிரீன் டீ’ யில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். கிரீன் டீயை இளம் சூட்டில் தலையில் தேய்த்து, பிடித்து மசாஜ் செய்யவேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து கழுவவேண்டும். கூந்தல் நன்றாக வளர்ந்து, பட்டுப்போகாமல் அடர்த்தியாக இருக்க, மனநிலை அமைதியாக இருக்கவேண்டும். பரபரப்பாக வாழ்க்கையை உருவாக்கி, மன அழுத்தத்திற்குள் சிக்கிக்கொண்டால் கூந்தல் அதிகமாக உதிரும். அதுமட்டுமின்றி போதுமான அளவில் இரவு நேரத்தில் தூங்கவேண்டும். தண்ணீரும் தேவைக்கு பருகவேண்டும்

சரும அழகிற்கு உதவும் வினிகர்


சருமத்தின் அழகை பராமரிக்க உதவும் பொருட்களில் வினிகரும் ஒன்றாக உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

• உடல் நாற்றம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உடல் நாற்றம் மறைய ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.

• ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்.

• கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.  

• குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், பாதங்களை வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். பின்னர் மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்க்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

ஆள் பாதி...ஆடை பாதி..

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். எந்த உடையை எங்கு உடுத்த வேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரிவதில்லை. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது.

திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே மாற்றிவிடக்கூடும். குறுக்குவாட்டில் கோடுகள் அமைந்த புடவையை உயரமான பெண்கள் கட்டினால் குள்ளமாக தெரியும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

எனவே நமக்கான உடை என்ன என்பதை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். கடைத்தெரு, மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது மிதமான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது நலம்.

அலுவலகங்களுக்கோ, பள்ளி கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம். மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது.

சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்களின் கைகளில் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும் கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்


* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும்..

* கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.

செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.




வேப்பம்பூ தரும் அழகு குறிப்புகள்

• காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் -  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

• வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

• நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..

• வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..

• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.

• தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.